Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘ஆண்டாள்’ பற்றிய விமர்சனம் – வைரமுத்து விளக்கம்

In சினிமா
Updated: 12:12 GMT, Jan 9, 2018 | Published: 12:12 GMT, Jan 9, 2018 |
0 Comments
1379
This post was written by : Arul Jesu

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ என்ற கட்டுரைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்த வண்ணமாக இருக்கின்றன. ஆண்டாள் பற்றி தவறாக பேசியதாக வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில், ‘புண்படுத்துவது என் நோக்கமன்று’ என்று வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) விளக்கம் அளித்துள்ளார்.

தினமணி நாளிதழ் சார்பில், ஸ்ரீவில்லிப்புரத்தூரில் நேற்று (திங்கட்கிழமை) ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் வைரமுத்து உரையாற்றியிருந்தார். இவர் பேசிய சில கருத்துகள் சர்ச்சையக்குரியதாக இருந்ததாக கருத்தரங்கிற்கு வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுளுக்கிடையே உள்ள வித்தியாசம் குறித்து வைரமுத்து விளக்கிய விதத்தால் கருத்தரங்குக்கு வந்திருந்தவர்கள் அதிருப்தியில் ஆழ்ந்தனர். இவ்வாறு ‘ஆண்டாள்’ குறித்த வைரமுத்து தெரிவித்த எதிர்மறையான கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்று பா.ஜ.க வின் எச்.ராஜா, அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வைரமுத்து அவரது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

‘தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இன்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள்காட்டி கூறியிருந்தேன். அது எனது கருத்தன்று. அது ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து.

ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை. ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துக்களெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர். எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று, அப்படி யாரும் புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்.’ என்று கூறியுள்ளார்.

Vairamuththu

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg