Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லசந்த கொலையாளிகளுக்கு ஐ.தே.க.வில் அடைக்கலம்! – அசாத் சாலி

In இலங்கை
Updated: 12:13 GMT, Jan 9, 2018 | Published: 12:13 GMT, Jan 9, 2018 |
0 Comments
1161
This post was written by : Varshini

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடையவர்களை ஐக்கிய தேசிய கட்சி மூடி மறைப்பதுடன், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வருவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடும் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளருமான அசாத் சாலி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.

லசந்த விக்ரமதுங்க கொலையுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி, கொலையாளிகளையும் கைதுசெய்யவில்லை, மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளையும் செய்யவில்லையென அசாத் சாலி குறிப்பிட்டார்.

அத்தோடு, ரக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் கொலையுடன் தொடர்புடையவர்களையும் கைதுசெய்வதாக குறிப்பிட்ட நல்லாட்சி அரசாங்கம், அவர்களையும் கைதுசெய்யவில்லை. ஆக மொத்தத்தில் நல்லாட்சி அரசாங்கம் மரணித்து விட்டதென அசாத் சாலி குறிப்பிட்டார்.

இந்நிலையில், கடந்த மூன்று வருட காலத்தில் இடம்பெற்ற மோசடிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியே பொறுப்புக்கூற வேண்டுமென குறிப்பிட்ட அசாத் சாலி, ஜனாதிபதி மைத்திரி நேர்வழியில் பயணிப்பதாக குறிப்பிட்டார்.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்தியதைப் போன்று, ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பாகவும் விசாரணை நடத்தி, மோசடிசெய்யப்பட்ட பணத்தை மக்கள் சேவைக்காக ஜனாதிபதி பயன்படுத்துவார் என அசாத் சாலி நம்பிக்கை தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg