Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னிலங்கையர்கள் போன்று வட மக்களும் செயற்பட வேண்டும்: ரெஜினோல்ட் குரே

In இலங்கை
Updated: 12:40 GMT, Jan 9, 2018 | Published: 12:38 GMT, Jan 9, 2018 |
0 Comments
1160
This post was written by : Risha
DSC_0699

எவ்வித எதிர்பார்ப்புமின்றி தென்னிலங்கையர்கள் வடக்கு மக்களுக்கு உதவியளித்துள்ளனர். அதேபோன்று தமிழ் மக்களும் இன, மத வேறுபாடின்றி கடமையாற்ற வேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலய மாணவர்களுக்கு தென்னிலங்கையிலிருந்து வருகை தந்தவர்கள், சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்களை வழங்கினர்.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கான கற்றல் பொதிகளை வழங்கி, உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”தென்னிலங்கையிலிருந்து வந்த சகோதர மொழி நண்பர்களின் இந்த அன்பளிப்புகளானது நாம் அனைவரும் ஒற்றுமையாக இந்த நாட்டில் வாழ வேண்டும் என்ற செய்தியை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

யுத்தத்தால் பின்னடைவை எதிர்நோக்கியுள்ள மாணவர்கள், கல்வியில் மேம்பட வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த கற்றல் உபகரணங்களை அவர்கள் வழங்கியுள்ளனர்.

கொழும்பிலும், சர்வதேசத்திலும் வடமாகாண தமிழர்களே பெரும்பாலான துறைகளில் உயர் பதவிகளை வகிக்கின்றனர். எனவே நீங்களும், இவ்வாறு இன, மத, மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் உங்களது கடமையினை ஆற்ற வேண்டும் என்றார்.

DSC_0631 DSC_0654 DSC_0680

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)