Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியாவின் இருவேறு பகுதிகளில் பொலிஸார் சோதனை

In
Updated: 12:26 GMT, Jan 9, 2018 | Published: 12:26 GMT, Jan 9, 2018 |
0 Comments
1120
This post was written by : Suganthini

பிரித்தானியாவின் தென் யோர்க்ஷையர் (Yorkshire ) மற்றும் ரீஸைட் (Teesside) ஆகிய பகுதிகளில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்படி பகுதிகளில் கடத்தல் சம்பவங்கள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக, பொலிஸாருக்குக் கிடைத்துள்ள முறைப்பாடுகளைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இளைஞர், யுவதிகள் இப்பகுதிகளுக்கு கடத்திவரப்பட்டு, பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுவதாகப் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், மேற்படி பகுதிகளில் சுமார் 150 பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்தச் சோதனையின்போது, ஸ்ரொக்டன் ஒன் ரீஸ் (Stockton-on-Tees), ஷெபீல்ட் (Sheffield) ஆகிய பகுதிகளில் 7 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாகவும், அந்த ஊடகம் கூறியுள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோகங்களுக்குத் திட்டமிட்டமை, கடத்தல், மிரட்டல் ஆகிய குற்றச்சாட்டுகளில் இவர்களைக் கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg