Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முக்கிய பதவி வழங்கிய சிக்கிம் முதலமைச்சர்.

In சினிமா
Updated: 13:20 GMT, Jan 9, 2018 | Published: 13:20 GMT, Jan 9, 2018 |
0 Comments
1163
This post was written by : Arul Jesu

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒஸ்கார் விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள நிலையில், தற்போது சிக்கிம் முதலமைச்சர், சிக்கிம் மாநிலத்தின் ‘விளம்பர தூதராக’ ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதவி வழங்கியுள்ளார்.

சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற குளிர்கால திருவிழாவில் சிக்கிம் மாநில முதலமைச்சர் பவன்குமார் சாம்லிங் கலந்துகொண்டிருந்தார். இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டார். இதன்போதே சிக்கிம் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த விழாவில் முதலமைச்சர் பவன்குமார் உரையாற்றுகையில், தங்களை சிக்கிம் மாநிலத்தின் விளம்பர தூதராக நியமிக்க விருப்பம் தெரிவிப்பதாக ஏ.ஆர்.ரஹ்மானைப் பார்த்து கூறினார். உடனே இன்ப அதிர்ச்சி கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் பின்னர் முதல்வரின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டார்.
உடனே முதலமைச்சர், ‘எனது பணிவான பரிந்துரையை ஏற்று சிக்கிம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக தனது பொன்னான நேரத்தை செலவிட ஒப்புக்கொண்ட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி’ என்றார்.

அடுத்து இந்த நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் ‘எனக்கு முக்கியத்துவம் தந்து கௌரவம் அளிக்கும் விதமாக மாநிலத்தின் விளம்பர தூதராக அறிவித்ததற்கு நன்றி. மற்றும் சிக்கிம் மாநிலம் சகிப்புத்தன்மை, அமைதி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு நாம் ஒன்றாக பாடுபடுவோம்’. என்றார்.

இதனைவிட சிக்கிம் மாநிலத்தின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக அவர் ஒரு பாடலையும் விரைவில் வெளியிடவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg