Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அம்பியூலன்ஸ் வண்டியில் பிறந்த 15 குழந்தைகள்!

In இலங்கை
Published: 13:19 GMT, Jan 9, 2018 |
0 Comments
1097
This post was written by : Vithushagan
ambulance11

மன்னார் மாவட்டத்தில் கடந்த மாதம் 15 பிரசவங்கள் அம்பியூலன்ஸ் வண்டியில் நடந்துள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 115ஆவது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது, இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

”மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் நிரந்தரமான மகப்பேற்று நிபுணர் இல்லை. மத்திய அரசாங்கத்திடம் பல தடவைகள் கேட்டும் பயனில்லை.

தாய்மாரை அம்பியூலன்ஸ் வண்டி மூலம் வெளிமாவட்ட வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லவேண்டிய தேவை எழுகின்றது.

இந்நிலையில் கடந்த மாதம் மட்டும் 15 பிரசவங்கள் அம்பியூலன்ஸ் வண்டிகளில் நடந்துள்ளன. மேலும் ஒரு கர்ப்பிணித்தாயை அவசர சிகிக்சைப் பிரிவில் வைத்து மயக்க மருந்து கொடுக்க முடியாமல் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்ற வேண்டிய நிலை உருவானதாகவும் கூறியுள்ளார்.

அங்கே மயக்க மருந்து நிபுணரும் இல்லை. இவ்வாறு பருத்திதுறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி போன்ற வைத்தியசாலைகளிலும் மருத்துவர்கள் இல்லை.

இது தொடர்பாக பல தடவைகள் மத்திய அரசாங்கத்துக்கு எடுத்துக் கூறியும் இதுவரை ஆக்கப்பூர்வமான பதில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு முதல்வரிடம் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருந்த போது அவர் ஜனாதிபதியை சந்தித்து இந்த விடயத்தை கூறுவதற்கான நேரத்தை கேட்டு கொண்டிருக்கின்றார்” என   அமைச்சர் ஞா.குணசீலன் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)