Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மொழி உதவி அதிகாரிகளாக 1000 பேரை நியமிக்க நடவடிக்கை!

In இலங்கை
Published: 15:02 GMT, Jan 9, 2018 |
0 Comments
1107
icon_com
This post was written by : Vithushagan
thumb_large_mano_ganesan

மொழி உதவி அதிகாரிகள் 1000 பேர் 6 மாதம் பயிற்சி வழங்கப்பட்டு அரச நிறுவனங்களில் இவ்வருடத்தில் நியமிக்கப்படுவார்கள் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலை , பிரதேச செயலகம் மற்றும் பொலிஸ் உள்ளிட்டவற்றிற்கு இதில் முக்கியத்துவம் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

2020 ஆம் ஆண்டளவில் இவ்வாறான 3000 அதிகாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தேசிய பிரச்சினையை தீர்க்க தற்போதைய அரசாங்கம் அர்ப்பணித்துள்ளது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமைத்துவம் வழங்கிவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகொள்கையை நடைமுறைப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், இதன் மூலம் தேசிய பிரச்சனையை 60 சதவீதம் தீர்க்க உதவியாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.

அனைத்து பிரச்சனைக்கும் தனது தாய் மொழியில் கடிதம் மூலமும் உரையாடல் மூலமும் செயற்பட சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)