Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்! – அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

In இலங்கை
Updated: 15:35 GMT, Jan 9, 2018 | Published: 15:14 GMT, Jan 9, 2018 |
0 Comments
1260
This post was written by : Puvanes
maiththiri001

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கடுமையான தீர்மானங்களை எடுத்துவருவதால் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிடுள்ளார்.

மேலும், ஜனாதிபதி ஊழல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தபோது அனைத்து ஊழல்களும் மூடி மறைக்கப்படும் என்றே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன எனினும் தற்போது ஊழலில் ஈடுபட்டுள்ளவர்களின் போலி முகத்திரைகள் கிழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேபோல, மிஹின் லங்கா, ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான அறிக்கைகளும் வெளிவரவுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமரவீர, இதன்போது மேலும் பல ஊழல்களும் அம்பலமாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய நிலையில் ஜனாதிபதி அச்சமின்றி தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றதால் அவரது உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனக் கூறியுள்ள அவர், எதிர்காலத்தில் மேலும் பல ஊழல்களை அம்பலப்படுத்தவும் ஜனாதிபதி முயன்று வருகின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாதாள உலகக்குழுக்களுக்கு எதிராக ஜனாதிபதி செயற்படும் போது அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும், இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்தபோது கடந்தகாலத்தில் சில தலைவர்கள் உயிரை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)