Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமர் தெரசா மே அமைச்சரவையை மாற்றியமைத்தார்

In
Updated: 17:58 GMT, Jan 9, 2018 | Published: 17:54 GMT, Jan 9, 2018 |
0 Comments
1156
This post was written by : S.K.Guna
british

பிரித்தானிய அமைச்சரவையை பிரதமர் தெரசா மே மறுசீரமைத்துள்ளார்.  கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கொன்சர்வே கட்சிக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், டி.யூ.பி.யின் ஆதரவுடன் பிரதமர் ஆட்சியமைத்தார்.

பிரெக்ஸிற் விவகாரத்தினை நடைமுறைப்படுத்துவதிலும் இன்னும் சில விடயங்களிலும் கொன்சர்வேற்றிவ் கட்சி உறுப்பினர்களிடையே ஒருமுகத்தன்மை காணப்படாத நிலையில் புதிய அமைச்சரவை மாற்றத்தினை பிரதமர் ஏற்படுத்தியுள்ளார்.

புதிய அமைச்சரவையில் சாம் கைமா பல்கலைக்கழகங்கள் அமைச்சுக்குக்கும் அலோக் ஷர்மா வேலைவாய்ப்பு அமைச்சுக்கும் டொமினிக் ராப் வீடமைப்பு அமைச்சுக்குக்கும் ரொறி ஸ்ருவார்ட் நீதித்துறைக்கும் டேமியன் ஹின்ட்ஸ் கல்வித்துறைக்கும் எஸ்தர் மக்வே ஓய்வூதியத் துறைக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய இந்த அமைச்சரவை மாற்றங்கள் குறித்து கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைவரான பிரண்டன் லூயிஸ் கூறுகையில் அமைச்சரவை மறுசீரமைப்பு மூலம் புதிய காற்றினை சுவாசிக்கமுடியும் என்று தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg