Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரணிலின் விசேட உரை: நாடாளுமன்றில் கடும் அமளி (3ஆம் இணைப்பு)

In இலங்கை
Published: 02:32 GMT, Jan 10, 2018 |
0 Comments
1253
This post was written by : Varshini

பிணை முறி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாதப் பிரதிவாதங்களை தொடர்ந்து, சபை அமர்வுகள் சில நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பிரதமர் ரணில் உரையாற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், சபைக்கு நடுவே வந்த ஒன்றிணைந்த எதிரணியினர் கூச்சலிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அரசாங்கத் தரப்பிலுள்ளவர்களும் எதிர்க்கருத்துக்களை வெளியிட, சபையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சபையை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

பிணை முறி அறிக்கையை ஜனாதிபதி சமர்ப்பிப்பார்!  (2ஆம் இணைப்பு)

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விசாரணை அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றில் சமர்ப்பிப்பார் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வில் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி தமக்கு இவ்வறிவித்தலை  விடுத்ததாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, ஒரு வார காலத்திற்குள் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

சர்ச்சைகளுக்கு மத்தியில் கூடுகிறது முதலாவது நாடாளுமன்ற அமர்வு

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் எழுந்துள்ள பாரிய சர்ச்சைகளுக்கு மத்தியில், இவ்வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று (புதன்கிழமை) கூடவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விசேட அமர்வாக கூடவுள்ள இந்த அமர்வில், சகல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் பிணை முறி விநியோகத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பான விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்றை உடனடியாக கூட்டி அது குறித்து விவாதிக்குமாறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இதன் பிரகாரம் இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடவுள்ளதோடு, பிணை முறி விசாரணை அறிக்கையின் பிரதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். குறித்த அறிக்கையின் மீதான விவாதத்தை பிறிதொரு தினத்தில் நடத்துவதற்கு நேற்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று அறிக்கை சமர்ப்பிப்போடு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)