Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மலையக அபிவிருத்திக்கு அதிகார சபை! – அமைச்சரவை அனுமதி

In இலங்கை
Updated: 05:56 GMT, Jan 10, 2018 | Published: 02:51 GMT, Jan 10, 2018 |
0 Comments
1101
This post was written by : Varshini
thigambaram

மலையக மக்களுக்கான அபிவிருத்தி பணிகள் மற்றும் வீடமைப்பு திட்டங்களை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக, மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையொன்றை அமைக்க அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.

மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் முன்வைக்கப்பட்ட குறித்த அதிகார சபை தொடர்பான பத்திரத்திற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மலையக மக்களுக்கான சேவைகளை தங்குதடையின்றி முன்னெடுப்பதற்கு அரச நிறுவனமொன்று இல்லாமையானது, பாரிய பின்னடைவாக காணப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முயற்சியில் இதற்கா செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அதன் பிரதிபலனாக  மலையக அபிவிருத்திக்கு அதிகார சபையொன்று உருவாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)