Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேங்காய் மட்டைகளுக்குள் முதிரைமரக்குற்றிகள் : மூவர் கைது!

In இலங்கை
Updated: 05:43 GMT, Jan 10, 2018 | Published: 05:43 GMT, Jan 10, 2018 |
0 Comments
1080
This post was written by : Arul Jesu

கிளிநொச்சி பூநகரி பகுதியில் தேங்காய் மட்டைகளுக்குள் மறைத்துக் கொண்டுசெல்லப்பட்ட ஒருதொகை முதிரை மரக்குற்றிகளை பூநகரி பொலிஸார் கைப்பற்றியுனள்ளனர். அத்தோடு மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற வாகனத்தின் சாரதி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பூநகரியிலிருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் ஏ-32 வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப் ரக வாகனம் ஒன்றை சங்குப்பிட்டிப் பாலத்தருகில் வைத்து பூநகரி பொலிஸார் சோதனையிட்ட போதே, மெற்படி மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

எட்டு மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டதோடு அவற்றின் பெறுமதி ஒரு இலட்சத்திற்கும் அதிகமென பொலிஸார் கூறியுள்ளனர்.

மரக்குற்றிகளை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, சந்தேகநபர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துது வருகின்றனர்.

IMG-4b26fa2a331ba4d77a5bd9c4bb14994a-V IMG-012aa2766894d1350d55c2f8b06d427a-V

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg