Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கலிபோர்னியாவில் பாரிய மண்சரிவு: சுமார் 13 பேர் உயிரிழப்பு

In
Updated: 03:55 GMT, Jan 10, 2018 | Published: 03:55 GMT, Jan 10, 2018 |
0 Comments
1225
This post was written by : Suganthini

அமெரிக்காவின் தெற்குக் கலிபோர்னிய மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மண்சரிவில் சிக்கி சுமார் 13 பேர் உயிரிழந்துள்துடன், 163 பேர் காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தெற்குக் கலிபோர்னியாவில் கடந்த சில நாட்களாக அடை மழை பெய்துவரும் நிலையில், அங்கு பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதiனைத் தொடர்ந்து, கலிபோர்னியாவின் கிழக்கு சாண்டா பார்பராவிலுள்ள ரோமியோ கன்யோனில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மேற்படி பகுதியில் 300க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமென, அவசர அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மேற்படி பகுதியிலிருந்து மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்கெனவே ஆயிரக்கணக்கானோர் வெளியேறியுள்ளனர்.

50க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg