Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவை திணற வைத்த தென்னாபிரிக்க பந்துவீச்சாளர் முதலிடத்திற்கு முன்னேற்றம்!

In கிாிக்கட்
Published: 04:19 GMT, Jan 10, 2018 |
0 Comments
1175
This post was written by : Anojkiyan
rab

இந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், சிறப்பாக பந்து வீசிய தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா, டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

கேப்டவுணில் நடைபெற்ற இப்போட்டியில் மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், 5 புள்ளிகள் கூடுதலாக பெற்று 888 புள்ளிகளுடன் அவர் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இவருக்கு அடுத்த படியாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், 887 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், 861 புள்ளிகளுடன் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிந்திர ஜடேஜா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இதேவேளை, முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்ற பிலண்டர், ஆறு இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)