Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இணைப்பாட்டங்களை உருவாக்குவதில்தான் டெஸ்ட் போட்டியின் வெற்றி அடங்கியுள்ளது: கோஹ்லி

In கிாிக்கட்
Updated: 04:49 GMT, Jan 10, 2018 | Published: 04:49 GMT, Jan 10, 2018 |
0 Comments
1249
This post was written by : Anojkiyan

இணைப்பாட்டங்களை உருவாக்குவதில்தான் டெஸ்ட் போட்டியின் வெற்றி அடங்கியுள்ளது ஆனால், இந்திய அணி வீரர்கள் அதை தவறவிட்டதாக இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் தோல்வியின் பின், நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்கா அணி, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது. அவர்களை 220 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்க செய்திருந்தால் இந்தியாவுக்கு வெற்றி எளிதானதாக இருந்திருக்கும். விக்கெட்டுகளை அடுத்தடுத்து இந்திய அணி வீரர்கள் இழந்தது சரியில்லை. டெஸ்ட் போட்டியின் அனைத்து நாட்களிலுமே நமக்கு வெற்றிக்கான வாய்ப்பு திறந்தே இருந்தது. ஏதாவது ஒரு நாளை நாம் முழுமையாக கையகப்படுத்தியிருந்தால் வெற்றி நமக்கு கிடைத்திருக்கும்.

இந்திய அணி, தென்னாபிரிக்க அணியில் இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய போது இந்திய வீரர்கள் கை கொடுக்க தவறிவிட்டனர். யாராவது ஒருவர் 75-80 ஓட்டங்கள் எடுத்திருந்தாலும் வெற்றிக்கு வாய்ப்பு இருந்தது. தென்னாபிரிக்கா அணிக்கு பெருமை சேர வேண்டும். அவர்கள் அணியில் ஒரு பந்துவீச்சாளருக்கு காயம் ஏற்பட்டு வெளியேறிவிட்டார். இருப்பினும் சிறப்பாக பந்து வீசி வெற்றி பெற்றனர்.

இணைப்பாட்டங்களை உருவாக்குவதில்தான் டெஸ்ட் போட்டியின் வெற்றி அடங்கியுள்ளது. நாம் அதில் கோட்டை விட்டோம். நம்மைவிட தென்னாபிரிக்கா அணியின் துடுப்பாட்ட வீரர்கள், அதை சிறப்பாக செய்தனர். வெளிநாடுகளில், சவாலான மைதானங்களில் விளையாடும்போது மனவலிமை முக்கியமானது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மனவலிமை பாராட்டுக்குரியதாகவே இருந்தது” என கூறினார்.

கேப்டவுணில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 72 ஓட்டங்களால் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg