Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ராணுவமட்டப் பேச்சுக்கு வடகொரியா – தென்கொரியா சம்மதம் 

In உலகம்
Updated: 05:10 GMT, Jan 10, 2018 | Published: 04:33 GMT, Jan 10, 2018 |
0 Comments
1167
This post was written by : Suganthini

ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்த வடகொரியாவும் தென்கொரியாவும் சம்மதம் தெரிவித்துள்ளன.

தென்கொரியாவில் எதிர்வரும் பெப்ரவரியில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல், வடகொரியா மற்றும் தென்கொரிய அதிகாரிகளுக்கிடையில் பன்முன்ஜொம் கிராமத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

இதன்போது, இரு நாடுகளுக்கிடையில் பதற்றமான சூழ்நிலை அதிகரித்துள்ள நிலையில், விரோதப்போக்கைக் கைவிட வேண்டுமென்பதுடன், ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டுமென்று வடகொரியாவிடம், தென்கொரியா அழைப்பு விடுத்திருந்தது.

இதற்குப் பதிலளித்த வடகொரியா, கொரிய தீபகற்பத்தில் சுமூகமான நிலைமையை ஏற்படுத்துவதற்காக, ராணுவ பேச்சுவார்த்தைக்கு சம்மதிப்பதாகக் கூறியுள்ளது.

வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகளின் எல்லையில் காணப்படும் ராணுவப் பதற்றத்தைக் குறைக்கும் வகையில் இப்பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

இதேவேளை, மேற்படி இரு நாடுகளுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா வரவேற்புத் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg