Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரிருந்து அமெரிக்க முன்னணி வீராங்கனை விலகல்!

In டெனிஸ்
Updated: 05:25 GMT, Jan 10, 2018 | Published: 05:24 GMT, Jan 10, 2018 |
0 Comments
1114
This post was written by : Anojkiyan
Serena-Williams-Pregn_Nava

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகுவதாக, அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இத்தொடரில் மகுடம் சூடிய அவர், அந்த நினைவுகளோடு இந்தப் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் முழு உத்வேகத்தோடு களம் இறங்குவேன் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று டென்னிஸ் அரங்கையே அதிர வைத்த செரீனா வில்லியம்ஸ், கடந்த ஆண்டு அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற கையோடு கர்ப்பமானார்.

இதனால், ஓராண்டு காலம் ஓய்வில் இருந்து மீண்டும் களத்திற்கு திரும்பிய செரீனா வில்லியம்ஸ், அபுதாபியில் நடைபெற்ற கண்காட்சி போட்டி ஒன்றில், பிரெஞ்ச் ஓபன் சம்பியனான லாத்வியா வீராங்கனை ஆஸ்டாபென்கோவிடம் 6-2, 3-6, 10-5 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

இந்த தோல்வியினால், கடுமையாக பாதிக்கப்பட்ட அவர், இன்னமும் ஓய்வு எடுத்து வலிமையாக திரும்புவதற்கு எண்ணியுள்ளார். அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)