Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்: தமிழிசை வலியுறுத்தல்

In இந்தியா
Updated: 05:26 GMT, Jan 10, 2018 | Published: 05:26 GMT, Jan 10, 2018 |
0 Comments
1177
icon_com
This post was written by : Elakkiya
201801100937271899_Vairamuthu-apologizes-says-tamilisai-soundararajan_SECVPF

ஆண்டாள் தொடர்பாக அவறுதுறாக பேசிய கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 7 ஆம் திகதி ராஜபாளையத்தில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்றிருந்த வைரமுத்து ஆண்டாள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போது, தேவதாசி மரபில் வந்தவரே ஆண்டாள் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆண்டாளை பெருமைப்படுத்துகிறேன் என்று கூறி கவிஞர் வைரமுத்து சிறுமைப்படுத்தியிருக்கிறார். தேவதையாகவும், பெண் ஆள்வாராகவும் பெருமை சேர்த்தவரை தேவதாசியாக சித்தரிக்க எவ்வாறு முடியும். தமிழரை பழித்தவரை தாய் தடுத்தாலும் விடேன் என்ற பாரதியின் வார்த்தைக்கு ஏற்ப தமிழ் வளர்த்த ஆண்டாளை பழித்தவரை யார் தடுத்தாலும் விடோம் என்பதே எமது நிலைப்பாடு.

மனம் புண்பட்டால் வருந்துகிறேன் என்பது பண்படாமல் எழுதிய வாசகங்களுக்கு பதில் ஆகாது. எனவே அவருடைய கட்டுரையை உடனடியாக மாற்றி எழுத்து பூர்வமாக பதிவு செய்வதுடன் இனிவரும் நாட்களில் இதுபோன்று உணர்வுகளை காயப்படுத்த மாட்டேன் என்று மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)