Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்: 7 பேர் உயிரிழப்பு

In
Published: 05:11 GMT, Jan 10, 2018 |
0 Comments
1152
This post was written by : Suganthini

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில், 5 பொலிஸார் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலூஸ்சிஸ்தான் மாகாண முதலமைச்சர் சனாவுல்லா ஜெரி மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம், குவெட்டா நகரிலுள்ள சட்டமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுமென்று அறிவிக்கப்பட்டது. ஆனால், முதலமைச்சர் ஜெரி, தனது பதவியைத் திடீரெனத் ராஜினாமாச் செய்ததால், சட்டமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

சட்டமன்றம் கூடுமென்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதால், குவெட்டாவிலுள்ள சட்டமன்றக் கட்டடத்தைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  இந்நிலையில், மேற்படி பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பொலிஸாரின் டிரக் வண்டியை இலக்குவைத்து தற்கொலைதாரி குண்டை வெடிக்க வைத்துள்ளார்.  இதன்போது, 5 பொலிஸாரும் 2 பொதுமக்களும் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, முதலமைச்சர் பதவி விலகிய சிறிதுநேரத்தில் இந்தத் தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)