Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய விளையாட்டில் களமிறங்கும் உசைன் போல்ட்!

In உதைப்பந்தாட்டம்
Updated: 05:56 GMT, Jan 10, 2018 | Published: 05:56 GMT, Jan 10, 2018 |
0 Comments
1194
This post was written by : Anojkiyan

தடகள போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுள்ள உலகின் அதிவேக மனிதராக வர்ணிக்கப்படும் ஜமைக்காவின் உசைன் போல்ட், கால்பந்து போட்டிகளில் விளையாடுவதற்கு தன்னை ஆயப்படுத்தி வருகிறார்.

ஜேர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற கால்பந்து கழக அணியான போரூஸியா டார்ட்மன்ட் கால்பந்து அணியில், சோதனை முறையில் விளையாடவுள்ள உசைன் போல்ட், இதற்காக தற்போது கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.

பன்டல்ஸ்லிகா அணிக்கு எதிரான போட்டியில், போரூஸியா அணியில் பங்கேற்பது குறித்து போல்ட் கூறுகையில்,

“மார்ச் மாதம் நடைபெறவுள்ள இந்த போட்டியைப் பொருத்தே அடுத்தகட்ட முடிவை மேற்கொள்ள உள்ளேன். மென்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடுவது எனது மிகப்பெரிய கனவுகளில் ஒன்றாகும். கால்பந்தில் தேர்ச்சி அடையும் பட்சத்தில், அந்த அணியில் இணையும் வகையில் கடுமையாக பயிற்சி எடுப்பேன்.

நான் தகுதியுடன் தயார் நிலையில் இருக்கும் பட்சத்தில், மென்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைவதற்கு இயன்ற முயற்சிகளைச் செய்வதாக அந்த அணியின் முன்னாள் மேலாளர் அலெக்ஸ் ஃபெர்குசன் கூறியுள்ளார். தடகள வீரனாக நான் ஒருபோதும் பதற்றமாக உணர்ந்ததில்லை. என்றாலும் தற்போது புதிய விளையாட்டில் ஈடுபட உள்ளதால் பதற்றத்தை உணர்கிறேன்” என கூறினார்.

கடந்த ஆண்டு லண்டனில் நடைபெற்ற உலக தடகள போட்டிகளின் போது காயம் காரணமாக ஓய்வு பெறுவதாக அறிவித்த 31 வயதான உசைன் போல்ட், ஒலிம்பிக்கில் 8 முறை தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg