Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக தமிழாராய்ச்சி மாநாடுப் படுகொலை நினைவு தினம்

In இலங்கை
Published: 05:30 GMT, Jan 10, 2018 |
0 Comments
1123
This post was written by : JudeDanish

நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 44 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (புதன் கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.  யாழ்ப்பாணம் முற்றவெளியில் உள்ள நினைவுத் தூபியில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1974ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் பேராசிரியர் வித்தியானந்தன் தலைமையிலான குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில்  ஏற்பட்ட  கலவரத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம், பொலிஸாரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது. இதன்போது மாநாட்டில் கலந்துகொண்டிருந்த ஒன்பது அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

இன்றைய 44 வது ஆண்டு நினைவு தினம்  நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண பெண்கள் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், கஜதீபன் உட்படப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)