கரீபியன் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
கரீபியன் தீவுகளில் 7.6 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவசரகால நிலைமைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஹொண்டூராஸுக்கு சொந்தமான தீவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், இந்த நிலநடுக்கம் வட மத்திய அமெரிக்காவில் உணரப்பட்டதாக, அமெரிக்க புவியியல் நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அவசர நிலைமைக்கு தயாராக இருக்குமாறும் பொதுமக்களுக்கு, ஹொண்டூராஸ் ஜனாதிபதி ஜுவான் ஒர்லண்டோ ஹெர்னான்டெஷ் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலநடுக்கம் தொடர்பான சேத விவரம் இதுவரையில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.