Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படத்திற்கு இசை அனிருத்?

In சினிமா
Published: 08:56 GMT, Jan 10, 2018 |
0 Comments
1075
This post was written by : Varothayan
ajith anirudh

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, படங்களைத் தொடர்ந்து அஜீத் – சிவா கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் தான் ‘விஸ்வாசம்’.

இதன் படக்குழுவினர் குறித்த விபரம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இசையமைப்பாளர் யார் என்பது உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது.

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பார் எனக் கூறப்பட்டது. பின்னர் ‘விக்ரம் வேதா’வில் கலக்கிய சி.எஸ்.சாம் இசையமைப்பாளர் என தகவல்கள் வெளிவந்திருந்தன. ஆனால், அவர் அதை மறுத்துள்ளார்.

இந்நிலையில், அனிருத்துடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படங்களில் அனிருத்தின் பாட்டுக்கள் பட்டையைக் கிளப்பியிருந்த நிலையில், ‘விஸ்வாசம்’ படத்திலும் இந்தக் கூட்டு தொடரும் என எதிர்பார்க்கலாம்.

வழக்கமாக நரை முடியுடன் ‘சோல்ட் அன்ட் பெப்பர்’ லுக்கில் தோன்றும் அஜீத், இப்படத்தில் இளமையாக கறுத்த முடியுடன் தோன்றுவார் என ஏற்கனவே செய்திகள் வெளிவந்துள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)