Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னாபிரிக்காவிற்கு பதிலடி உண்டு: ஹர்திக் பாண்ட்யாவின் கருத்தால் இரசிகர்கள் மகிழ்ச்சி

In கிாிக்கட்
Updated: 06:19 GMT, Jan 10, 2018 | Published: 06:19 GMT, Jan 10, 2018 |
0 Comments
1285
This post was written by : Anojkiyan

தென்னாபிரிக்கா அணியிடம் பெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பதிலடி கொடுக்கப்படும் என இந்தியக் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

கேப்டவுணில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 72 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய பாண்ட்யா, முதல் இன்னிங்ஸில் 93 ஓட்டங்களும் 1 விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டும் ஒரு ஓட்டமும் பெற்றார்.

இதனால் அவரது பங்களிப்புக்கு இரசிகர்கள் டுவிட்டரில் பாராட்டு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள பாண்ட்யா,

‘வாழ்த்துக்களும் ஆதரவும் வழங்கிய இரசிகர்களுக்கு நன்றி. இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது. அடுத்த டெஸ்ட்டில் நிச்சயம் பதிலடி கொடுப்போம்’ என பதிவிட்டுள்ளார்.

குறித்த கருத்து இரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளதோடு, மகிழ்வடையவும் செய்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg