Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தயா மாஸ்டர் மீதான தாக்குதல் ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்: சீ.வீ.கே.

In இலங்கை
Updated: 10:17 GMT, Jan 10, 2018 | Published: 06:28 GMT, Jan 10, 2018 |
0 Comments
1091
This post was written by : Arul Jesu
sivagnanam-srilanka-net

யாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்றின் செய்திப் பணிப்பாளரான தயா மாஸ்டர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளதென வடக்கு  மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, அவர் இன்று (புதன்கிழமை) விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இது திட்டமிட்ட செயலாகவே காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள சீ.வீ.கே.சிவஞானம், இந்த சம்பவத்தின் பின்னணிகள் குறித்து முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் நேற்று முன்தினம் நுழைந்த ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் தயா மாஸ்டருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. தாக்குதலை நடத்திய 53 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்தின் சேவை இணைப்பு, பணம் செலுத்தாத காரணத்தால் துண்டிக்கப்பட்டதாகவும், அதனால் ஆத்திரமடைந்தே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

THAYAMASTER 2

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)