Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அ.தி.மு.கவை களங்கப்படுத்த விடமாட்டேன்: மதுசூதனன்

In இந்தியா
Updated: 06:30 GMT, Jan 10, 2018 | Published: 06:28 GMT, Jan 10, 2018 |
0 Comments
1107
This post was written by : Elakkiya
e-madhusudhanan-759

அ.தி.மு.க. வுக்கு ஒருபோதும் களங்கம் ஏற்பட விடமாட்டேன் என மதுசூதனன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு இன்று (புதன்கிழமை) வழங்கிய செவ்வியில் மதுசூதனன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, அ.தி.மு.க தன்னால் உருவாக்கப்பட்டது என்பதால் கட்சி மீது அதிருப்தி அடைய மாட்டேன் என்றும் அ.தி.மு.க. வுக்கு களங்களம் ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் தோல்வியடைய சுயேட்சை  வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் வெற்றிபெற்றார். இவ்வாறு தமிழகத்தில் அதிமுகவின் ஆட்சி நடைபெறுகின்ற போதிலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இடைத்தேல்தலில் கட்சியின் தோல்வி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அதிமுகவின் தோல்விக்கு முக்கிய அமைச்சர்கள் சிலரே காரணம் என்று தெரிவிக்கும் மதுசூதனன், தோல்விக்கு காரணமான அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் தோல்வி தொடர்பாக இதுவரை விசாரணை நடத்தாதது ஏன் என்றும் முதலமைச்சர் பழனிசாமியிடம்  கடிதம் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இரண்டு அணியாக பிரிந்து கிடந்த கட்சியை ஒன்றிணைத்து வலுவாக்க முயற்சித்தமை தவறா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஆர்.கே நகர்  தோல்வி தொடர்பாக கடிதம் எழுதியமை கட்சியின் உள்விவகாரம் என்று குறிப்பிட்ட மதுசூதனன், கடிதம் தொடர்பாக கட்சியின் தலைமையிடமே கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)