Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அர்ஜுன் மகேந்திரன் தப்பிக்க முடியாது : டிலான் பெரேரா

In இலங்கை
Updated: 09:47 GMT, Jan 10, 2018 | Published: 06:24 GMT, Jan 10, 2018 |
0 Comments
1182
This post was written by : Ravivarman

பிணைமுறி மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான அர்ஜுன் மகேந்திரன் உலகில் எங்கும் தப்பிச்செல்ல முடியாது. யார் தப்பிச்சென்றாலும் மோசடியாளர்களைத் தண்டிக்க சர்வதேச பொலிஸாரின் (இன்ரபோல்) உதவியைத் தயங்காது பெற்றுக்கொள்வோம் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பு, டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பொது எதிரணி நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவந்தால் அதன் உள்ளடக்கத்தின் அடிப்படையில் ஆதரவளிப்பதா, இல்லையா என்று தீர்மானிப்போம்.

பொது எதிரணியின் சில உறுப்பினர்கள் அர்ஜுன் மகேந்திரனின் மருமகன் அர்ஜுன் அலோஸியஸுடன் நெருங்கிய உறவைப் பேணி இருக்கின்றனர்.இதனால் சிலர் பிணைமுறி மோசடியை மூடிமறைக்கவும் முயன்றனர். தற்போது அவர்களே பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருகின்றனர்.

இது வரவேற்கத்தக்கது. அதிலுள்ள காரணிகளின் அடிப்படையில் நாங்கள் எவ்வாறு செயற்படுவதெனத் தீர்மானிப்போம். மாமாவைப் பாதுகாத்தவரையும், மருமகனைப் பாதுகாத்தவர்களையும் பார்த்தே தீர்மானிப்போம்” என இவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg