Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவிஸில் கடுமையான பனிப்பொழிவு

In ஐரோப்பா
Updated: 06:21 GMT, Jan 10, 2018 | Published: 06:21 GMT, Jan 10, 2018 |
0 Comments
1247
This post was written by : Suganthini

கடுமையான பனிப்பொழிவு காரணமாக, சுவிஸின் செர்மாட்  (Zermatt) மலைப்பகுதியில் சிக்கிய சுமார் 13 ஆயிரம் பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுவீஸில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டுவரும் நிலையில், செர்மாட் மலைப்பகுதியை பனி மூடியிருந்தது. குறித்த பகுதியிலுள்ள  போக்குவரத்துப் பாதைகளும் கடுமையான பனியினால் மூடப்பட்டிருந்தன. அத்துடன், அப்பகுதியில் மின்விநியோகமும் தடைப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  அங்குள்ள  ஆல்பைன் ஓய்வுவிடுதியில் விடுமுறையைக் கழிக்கச்சென்ற பலர், கடந்த இரண்டு நாட்களாக அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கியிருந்தனர். இவர்களை ஹெலிகொப்டர் மூலமாக மீட்டுள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை, அப்பிரதேசத்தில்   பனிச்சறுக்கு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும், அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg