Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலிய ஓபனிலிருந்து மற்றுமொரு முன்னணி வீராங்கனை விலகல்!

In டெனிஸ்
Published: 07:07 GMT, Jan 10, 2018 |
0 Comments
1098
This post was written by : Anojkiyan
Victoria Azarenka of Belarus reacts during her match against Serena Williams of the U.S.A. at the Wimbledon Tennis Championships in London

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து, முன்னணி டென்னிஸ் வீராங்கனையான பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா விலகியுள்ளார்.

இப்போட்டியில் விளையாடுவதற்கு வைல்ட் கார்ட் எனப்படும் தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடமல் நேரடியாக பிரதான சுற்றில் பங்கேற்கும் வகையிலான வாய்ப்பு கிடைத்தும், அவர் இப்போட்டியில் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளார். இதற்கு தனிப்பட்ட காரணங்கள் உண்டு எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தவரும், அவுஸ்ரேலிய ஓபனில் இரண்டு முறை சம்பியனுமாகிய விக்டோரியா அஸரென்கா, இத்தொடரில் பங்கேற்காதது இளம் வீராங்கனைகளுக்கு நல்ல வாய்ப்பாக அமையவுள்ளது.

இதேபோல, இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரே, 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் ஏற்கனவே அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து, விலகியுள்ளனர்.

இதேவேளை 12 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச், காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ஸ்பெயினின் ரஃபேல் நடால், சுவிஸ்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா ஆகியோர் அவுஸ்ரேலிய ஓபன் தொடரில் பங்கேற்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)