Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிணை முறி விசாரணை அறிக்கையால் தேவையற்ற இழுக்கு! – ஐ.தே.க.

In இலங்கை
Updated: 06:44 GMT, Jan 10, 2018 | Published: 06:40 GMT, Jan 10, 2018 |
0 Comments
1156
This post was written by : Ravivarman

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையால் தமது கட்சிக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளது. இது குறித்து இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பிணைமுறி மோசடி தொடர்பில் ஏனைய கட்சிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் பிரசாரங்களை உடனடியாக நிறுத்துமாறு ஐக்கிய தேசிய கட்சி தேர்தல் ஆணையகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான செயல் நடைபெறுவது தமது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அதேவேளை சில கட்சிகளுக்கு இதன்மூலம் நன்மை கிடைத்துள்ளது.

குறித்த அறிக்கையை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் ஊடகங்களில் எமது கட்சிக்கு எதிராகப் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளன. குறித்த நடவடிக்கைகளால் எமது கட்சி, தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றது” என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg