Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தபால் திணைக்களத்தின் சேவைகளை விஸ்தரிக்க நடவடிக்கைகள்!

In இலங்கை
Published: 06:55 GMT, Jan 10, 2018 |
0 Comments
1070
This post was written by : Ravivarman
gb

தபால் திணைக்களத்தின் சேவையை விஸ்தரித்து, மக்களுக்கு பயனுள்ள சேவைகளை வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தபால் சேவைகள் மற்றும் இஸ்லாமிய மத விவகார அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டி.பி.மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘பிரதமர் தலைமையில் செயற்படும் பொருளாதார விவகாரம் தொடர்பான குழுவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்மூலம் தபால் திணைக்களத்தில் வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, இலாபம் பெறக்கூடிய நிறுவனமாக அதனை மாற்ற எதிர்பார்த்துள்ளோம்.

இந்நிலையில், தபால் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பில், தபால்மா அதிபர், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)