Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா பேரூந்து நிலைய விவகாரம் – வடக்கு முதல்வர் மீது குற்றச்சாட்டு

In இலங்கை
Published: 08:02 GMT, Jan 10, 2018 |
0 Comments
1049
icon_com
This post was written by : Arul Jesu
MI. Lafeer 2

வவுனியா, இலங்கை போக்குவரத்துச் சபையின் பழைய பேரூந்து நிலையத்தை தனியாருக்குக் கொடுத்ததன் மூலம் கிழக்கு மாகாணத்திலிருந்து மேற்கொள்ளப்படும் போக்குவரத்து சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக இலங்கை சுதந்திர தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனே காரணம் என்றும்  குறித்த சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய மகஜர் ஒன்றை இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி, பிரதமர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளதாக  இலங்கை சுதந்திர தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் உப தலைவர் எம்.ஐ.லாபீர் கூறியுள்ளார்.

இவ்விடயத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் போக்குவரத்து சபை ஊழியர்கள் இணைந்து ஆதரவு தெரிவிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பிரகாரம் வவுனியா பேரூந்து நிலைய விவகாரத்தில் வடக்கு முதல்வரின் தலையீட்டை நிறுத்தி குறித்த பேரூந்து நிலையத்தை இலங்கை போக்குவரத்து சபையினருக்கே மீண்டும் வழங்கவேண்டுமென இலங்கை சுதந்திர தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், அரச பேரூந்து சாரதிகள், நடத்துநர்கள், பயணிகள் மற்றும் பேரூந்துகள் மீது நடத்தப்படும் கண்மூடித்தனமான தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மண்ணெண்ணெய் கலந்த எரிபொருள் பயன்பாடானது,  பேரூந்து ஒழுங்கு விதிகளை மீறும் செயலென குறிப்பிட்டுள்ள இலங்கை சுதந்திர தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர், இவ்விடயங்களை கவனத்திற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Meeting

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)