Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மதுசூதனனின் தோல்விக்கு முதலமைச்சரும் துணை முதலமைச்சருமே காரணம்: டி.டி.வி

In இந்தியா
Updated: 15:25 GMT, Jan 10, 2018 | Published: 07:43 GMT, Jan 10, 2018 |
0 Comments
1177
This post was written by : Elakkiya

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனனின் தோல்விக்கு முதலமைச்சரும் துணை முதலமைச்சரும், அமைச்சர் ஜெயக்குமாருமே முக்கிய காரணம் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அணியில் பங்காளிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டிய அவர் விரைவில் ஒவ்வொருவராக வெளியேறுவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாக இருக்கும் வரையே இரட்டை இலைக்கு மரியாதை இருந்ததாகவும் தற்போது எஸ்.பி. வீரப்பா மற்றும் நம்பியார் கைகளில் இரட்டை இலை இருப்பதாகவே மக்கள் நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg