Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரயில்வே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு: பயணிகள் சிரமம்

In
Updated: 07:29 GMT, Jan 10, 2018 | Published: 07:29 GMT, Jan 10, 2018 |
0 Comments
1161
This post was written by : Suganthini

பிரித்தானியாவில் 5 ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால், பயணிகள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

ரயில்வே காவலர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 5 ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்றுமுன்தினம் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், இரண்டாவது நாளாகவும் இன்று (புதன்கிழமை) பணிப்பகிஷ்கரிப்புத் தொடர்கின்றது.

லண்டனிலுள்ள தேம்ஸ்லிங் (Thameslink) ரயில் நிலையம்  மற்றும்   இங்கிலாந்தின் வடக்கு, தெற்கு ரயில் நிலையங்களில் சேவைகள் பணிப்பகிஷ்கரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன.

ரயில்வே ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்புக் காரணமாக, ஊழியர்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg