Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆறுமாதத்திற்கு பிறகு முதல் வெற்றியை பதிவு செய்தார் ஜோகோவிக்!

In டெனிஸ்
Updated: 07:49 GMT, Jan 10, 2018 | Published: 07:49 GMT, Jan 10, 2018 |
0 Comments
1113
This post was written by : Anojkiyan

அவுஸ்ரேலியாவில் நடைபெற்றுவரும் கூயொங் கிளாசிக் டென்னிஸ் தொடரில், செர்பியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிக் வெற்றி பெற்றுள்ளார்.

இன்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், 14ஆம் நிலை வீரரான நோவாக் ஜோகோவிக், நான்காம் நிலை வீரரான டோமினிக் தெயிமை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டில் அதிரடியாக விளையாடிய ஜோகோவிக், முதல் செட்டை 6-1 என எளிதாக வென்றார். இரண்டாவது செட்டிலும் ஜோகோவிக்கின் கையே ஓங்கியது.

இதனால் இரண்டாவது செட்டையும் 6-4 என ஜோகோவிக் கைப்பற்றினார். இரண்டு செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிக் இறுதியில் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

கடந்த ஆறுமாதங்களாக காயம் காரணமாக எந்த போட்டியிலும் பங்கேற்காமல் தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட ஜோகோவிக்கு இந்த வெற்றி உத்வேகம் அளித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg