Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முகத்துவாரத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 11:08 GMT, Jan 10, 2018 | Published: 07:42 GMT, Jan 10, 2018 |
0 Comments
1318
This post was written by : Varshini

மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் களப்பு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் மட்டக்களப்பு பொதுச்சந்தை வியாபார சங்கத்தின் தலைவரான 73 வயதுடைய வைத்தியலிங்கம் தர்மலிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு களப்பில் மிதக்கும் சடலம் : அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் களப்பு பகுதியில் ஆணொருவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் பிரகாரம், இன்று (புதன்கிழமை) அங்கு சென்ற காத்தான்குடி பொலிஸார் சடலத்தை கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.

எனினும், சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சுமார் 60 வயது மதிக்கத்தக்க குறித்த ஆணின் சடலத்தை அடையாளம் காண்பதற்கு உதவுமாறு, காத்தான்குடி பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg