Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கச்சதீவு திருவிழாவுக்கு தடையை மீறி செல்வோம்: நாட்டுப்படகு மீனவர்கள்

In இந்தியா
Updated: 11:08 GMT, Jan 10, 2018 | Published: 08:49 GMT, Jan 10, 2018 |
0 Comments
1127
This post was written by : Elakkiya

கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில் நாட்டுப்படகுகளுக்கு அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் தடையையும் மீறி செல்வோம் என நாட்டுப்படகு மீனவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதி கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நடைபெறவுள்ளது. இவ்விழாவுக்காக இலங்கை இந்திய பக்தர்களுக்கு யாழ்மறைமாவட்ட குருமுதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

அதேவேளை இம்முறை கச்சதீவு திருவிழாவில் பங்கேற்பதற்கு தமிழ்நாட்டிலிருந்து செல்வதற்கு 60 விசைப்படகுகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த அகில இந்திய பாரம்பரிய மீனவர்சங்க தலைவர் சின்னத்தம்பி, “பாரம்பரியமாக கச்சதீவு திருவிழாவிற்கு நாட்டுப் படகுகளில்தான் இறைபயணம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது வணிக நோக்கில் விசைப் படகுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கடந்த சில வருடங்களாக எமக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு திருவிழாவில் கலந்துகொளவதற்காக நீதிமன்றில் அனுமதி பெற்றிருந்தோம். ஆனாலும் பிரிட்ஜோ என்ற மீனவர் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததால் விழாவை புறக்கணித்து நாம் செல்லவில்லை. எனவே இவ்வாண்டு அனுமதி மறுக்கப்பட்டாலும் தடையை மீறி திருவிழாவுக்கு செல்வோம்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதேவேளை இராமேஸ்வரம் வேர்கோடு பங்குதந்தை அந்தோனிசாமி தெரிவிக்கையில், கச்சதீவு செல்லும் பக்தர்கள் இறைப் பயணமாக மாத்திரமே செல்ல வேண்டும் என்றும் வர்த்தக நோக்கத்துடன் அல்லது தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லவோ கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் விழா ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)