Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வயல் காணிகளில் கட்டடம் கட்டுவதை நிறுத்தக்கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

In இலங்கை
Updated: 12:44 GMT, Jan 10, 2018 | Published: 12:10 GMT, Jan 10, 2018 |
0 Comments
1127
This post was written by : Arul Jesu

மட்டக்களப்பு கொத்துக்குளம் மாரியம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள வயற்காணிகளில் கட்டடங்கள் அமைக்கும் பணிகளை நிறுத்துமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டமொன்று  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆலய முன்றலில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்த போராட்டத்தை, விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

ஆலயத்தின் அழகினையும், புனிதத் தன்மையையும் பாதுகாக்குமாறு இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் சுமார் 300 வருடங்கள் பழமைவாய்ந்த ஆலயமாக இருந்துவரும் கொத்துக்குளம் மாரியம்மன் ஆலயத்தின் அழகினையும், புனிதத்தன்மையையும் பாதுகாக்கும் பகுதியாக ஆலயத்தைச் சூழவுள்ள பகுதிகள் இருந்து வருவதாகவும்,இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இந்த ஆலயத்தின் பரிபாலனசபைத் தலைவர் எஸ்.ருவிகரன் தெரிவித்தார்.

மேலும், வயற்காணிகளை  நிரப்புவதற்கு அரசாங்கம் தடைகளை விதித்துள்ள போதிலும் அவற்றைப் பொருட்படுத்தாத வகையில் குறித்த பகுதியில் வயற்காணிகளை  நிரப்பிக் கட்டிடம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறித்த காணியில் கட்டடங்கள் கட்டப்படுமானால் அப்பகுதியில் எமது விவசாயமும் பாதிக்கப்படும் என்று போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விவகாரம் தொடர்பில் 2016ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்றதாகவும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மகஜர் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

DSC09004 DSC09007

DSC09027

DSC09029

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg