Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையை பின்பற்றி சர்வதேசமும் விலையை குறைக்கின்றது: ராஜித

In இலங்கை
Updated: 10:22 GMT, Jan 10, 2018 | Published: 08:03 GMT, Jan 10, 2018 |
0 Comments
1296
This post was written by : Risha

இலங்கையில் மருந்து விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதனுடன் ஒப்பிட்டு தமது உற்பத்திகளின் விலைகளை குறைக்க சர்வதேச நிறுவனங்களும் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தியவசிய மருந்துப் பொருட்களுக்கான விலை குறைப்பினால் பொதுமக்கள் பல்வேறு நன்மைகளை அனுபவித்து வருவதுடன், நாடும் நன்மையடைந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை, இதன் விளைவாக நாடு 9 பில்லியன் ரூபாய் வரையான வருடாந்த வருவாயை பெறும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

48 வகையான அத்தியவசிய மருந்துப் பொருட்களுக்கான விலை குறைப்பானது கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் அமுலுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg