Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டொன் பிரட்மனின் சராசரியை பின்தள்ளிய இளம் ஆப்கான் வீரர்!

In கிாிக்கட்
Updated: 11:35 GMT, Jan 10, 2018 | Published: 08:49 GMT, Jan 10, 2018 |
0 Comments
1317
This post was written by : Anojkiyan

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் டொன் பிரட்மனின் சாதனையொன்றை, ஆப்கானிஸ்தானின் இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் தகர்த்துள்ளார்.

முதற்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிக்கூடிய சராசரியை கொண்ட டொன் பிரட்மனின் சாதனையை, தற்போது 19வயதான பஹீர் ஷா என்பவர் முறியடித்துள்ளார்.

முதற்தர கிரிக்கெட் போட்டிகளில் டொன் பிரட்மன் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் போது, அவரது சராசரி 95.14ஆக இருந்தது. இதுவே இதுவரை காலமும் அதிகூடிய சாரசரியாக இருந்தது.

இதனை, தற்போது 19வயதான பஹீர் ஷா முறியடித்து, நடப்பு கிரிக்கெட் உலகில் புதிய சாதனையை முத்திரை பதித்துள்ளார். அவர் வெறும் ஏழு போட்டிகளில் (12 இன்னிங்ஸ்) விளையாடி 1096 ஓட்டங்களை குவித்துள்ளார். அவரது சராசரி 127.77 ஆகும். அவரது அதிகபட்ச ஓட்டம் 303 ஓட்டம் ஆகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg