Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியா – தென்கொரியா பேச்சு: பதற்ற சூழ்நிலை குறையும் சாத்தியம்

In உலகம்
Updated: 08:23 GMT, Jan 10, 2018 | Published: 08:20 GMT, Jan 10, 2018 |
0 Comments
1176
This post was written by : Suganthini

வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கிடையில் நடைபெறும் ராணுவ மட்டத்திலான    பேச்சுவார்த்தையின் மூலம், கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறைவதற்கான சாத்தியம் காணப்படுவதாக, ஐ.நா. செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.

வடகொரியக் குழுவினர் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வது தொடர்பாக, வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்குமிடையில் பன்முன்ஜொம் கிராமத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலையத் தவிர்க்கும் வகையில், வடகொரியாவும் தென்கொரியாவும் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையை நடத்த இணங்கியுள்ளன. அத்துடன், இரு நாடுகளுக்கிடையிலும் உடனடித் தொலைபேசி வசதியை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிகழ்வுகள் மூலம் இரு நாடுகளுக்கிடையிலும் பாதிக்கப்பட்டிருந்த உறவு புதுப்பிக்கப்பட்டு பலமடைவதுடன், இதுவரைகாலமும் இரு நாடுகளுக்கிடையிலும் காணப்பட்டுவந்த தவறான புரிந்துணர்வின்மை மற்றும் தப்பாபிப்பிராயத்தைக் குறைப்பதற்கு வழிவகுக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg