Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வயல் நிலங்களில் பாதிப்பு: விவசாயிகள் சந்தேகம்!

In இலங்கை
Updated: 11:13 GMT, Jan 10, 2018 | Published: 08:51 GMT, Jan 10, 2018 |
0 Comments
1182
This post was written by : Ravivarman

மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பிரதேசத்தின் பல பகுதிகளில் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக விவசாயிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதிகளின் வயல் நிலங்களில் பயன்படுத்தப்பட்ட உரம் தொடர்பாகவே தமது பயிர்கள் பாதிப்படைந்திருக்கலாம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அப்பிரதேச விவசாயி ஒருவர் இன்று (புதன்கிழமை) எமது செய்திப்பிரிவிற்கு கருத்துத் தெரிவிக்கையில், “நாங்கள் விவசாயம் செய்து சரியாக இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. விதை விதைத்தது முதல் உரம் மட்டும் தான் போட்டிருக்கின்றேன்.

உரம் போட்ட நாள் முதல் நாற்றுகள் இற்றுபோய், கரைந்து செல்கின்றன. இது குறித்து விவசாய திணைக்களத்தில் முறைப்பாடு செய்தேன். திணைக்களத்திலிருந்து வந்தவர் மைட்டா பூச்சி தின்றுவிட்டதாக கூறினார். இவ்வாறு மைட்டா தின்றால் முழு வயலில் உள்ள நாற்றுகளும் இறந்துபோகாது.

அவ்வாறு மைட்டா தின்றால் நாற்று சிகப்பு நிறமாக மாறும். பிறகு பூச்சிக்கொல்லி தெளித்த பிற்பாடு சரியாகி விடும். இது அவ்வாறு அல்ல வீடோல், கிரமக்சொன் தெளித்தது போல் முழுவதும் இறந்துபோய் உள்ளது. ஆனால் இதை சொன்னால் இவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் இதுவரை பொறுப்பு கூறும் அதிகாரிகள் எவரும் வரவில்லை பத்து ஏக்கருக்கும் அதிகமான வயல் நாசமாகிவிட்டது.

இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.தெனியாய விவசாய திணைக்களத்திற்கு சென்ற பிறகு சரியான நேரத்திற்கு உரம் கிடைப்பது இல்லை. கேட்டால் எங்களுக்கு தெரியாது என தெரிவிக்கின்றனர். விவசாயிகள் வங்கிகளில் கடன் பெற்றுதான் விவசாயம் செய்கிறார்கள். இதனால் கழுத்தில் கயிறை மாட்டிக்கொண்டு சாவதை விட வேறொன்றும் வழி கிடையாது” என குறித்த விவசாயி மேலும் தெரிவித்தார்.

வயல் (7) வயல் (6)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg