Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கற்றலோனியத் தலைவராக மீண்டும் கார்லெஸ்! பிரிவினைக் கட்சிகள் சம்மதம்

In
Updated: 08:52 GMT, Jan 10, 2018 | Published: 08:52 GMT, Jan 10, 2018 |
0 Comments
1132
This post was written by : Suganthini

கற்றலோனியத் தலைவராக கார்லெஸ் புகிடமொன்டை (Carles Puigdemont)   மீண்டும் தெரிவுசெய்ய கற்றலோனியாவின் பிரிவினைவாதக் கட்சிகள் சம்மதித்துள்ளன.

கற்றலோனியாவில் கடந்த ஒக்டோபரில் நடத்தப்பட்ட சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பில், 90 சதவீதமான வாக்குகள் கிடைத்த நிலையில், கார்லெஸ் புகிடமொன்ட் சுதந்திரப் பிரகடன அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இதனை ஏற்க விரும்பாத ஸ்பெய்ன் அரசாங்கம், கற்றலோனியா தமது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன், அங்கு கடந்த டிசெம்பர் 21ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்தியது. இதில் கற்றலோனியாவின் பிரிவினைவாதக் கட்சிகள் பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெற்றிருந்தன.

இந்நிலையில், தற்போது பிரஸ்ஸல்ஸிலுள்ள கார்லெஸ் புகிடமொன்டை கற்றலோனிய பிராந்தியத் தலைவராக ஏற்றுக்கொள்ள தாம் இணைங்கியுள்ளதாகவும், இந்த மாத இறுதியில் நடைபெறும் கற்றலோனிய நாடாளுமன்ற அமர்வில் கார்லெஸ் புகிடமொன்ட் வீடியோ மூலம் உரையாற்றவுள்ளதாகவும், கற்றலோனியாவின் பிரதான பிரிவினைவாதக் கட்சிகள் தெரிவித்துள்ளன.

கடந்த ஒக்டோபரில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கார்லெஸ் புகிடமொன்ட், பிரஸ்ஸல்ஸுக்கு தப்பிச்சென்றிருந்தார். இந்நிலையில், அவர் நாடு திரும்பினால் கைதுசெய்யப்படும் நிலைமையை எதிர்நோக்கி வருகின்றாரென்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg