Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலநறுவையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு- மூவர் படுகாயம்

In இலங்கை
Updated: 11:23 GMT, Jan 10, 2018 | Published: 09:19 GMT, Jan 10, 2018 |
0 Comments
1185
This post was written by : Risha

பொலநறுவை, கதுறுவெல- நவநகர பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

கெப் ரக வாகனமொன்று முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இன்று (புதன்கிழமை) குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

கதுறுவெல பகுதியிலிருந்து நவநகர நோக்கி பயணித்த கெப் வாகனத்தின் சாரதி நித்திரை தூக்கம் காரணமாக தவறான பக்கத்தில் வாகனத்தை செலுத்தியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது கெப் வாகனம் எதிரே வந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு, வீடொன்றில் படலையை உடைத்துக்கொண்டு வீட்டின் தூணொன்றில் மோதி நின்றுள்ளது.

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்தவர், அதிலிருந்து குதித்து உயிர் தப்பியுள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்கள் பொலநறுவையில் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தை ஏற்படுத்திய கெப் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலநறுகைவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg