Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலிய உதவியுடன் டெங்குவை கட்டுப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

In இலங்கை
Updated: 11:40 GMT, Jan 10, 2018 | Published: 09:57 GMT, Jan 10, 2018 |
0 Comments
1092
This post was written by : Risha

அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன், இலங்கையில் பெருகிவரும் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பிரதான பொது சுகாதார பிரச்சினையாக டெங்கு நோய் உருவெடுத்துள்ள அதேவேளை, கடந்த இரு தசாப்தங்களில் பாரிய உயிர்கொல்லி நோயாகவும் மாறியுள்ளது.

நோயை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், இந்நோய் தாக்கம் காரணமாக 2017ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 400 மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.

டெங்கு நுளம்பு பரவலை கட்டுப்படுத்த திறமையான ஆற்றல் உத்திகளை கையாள வேண்டியுள்ளது. இந்நிலையில், வோல்பாச்சியா (Wolbachia) எனும் பக்ரீறியாவை பயன்படுத்தி டெங்கு வைரஸ் பரவலை தடுப்பதற்கான சோதனையொன்றை அவுஸ்ரேலிய மொனேஷ் பல்கலைக்கழகம் வெற்றிகரமாக நிறைவுசெய்திருந்தது.

அதற்கமைய அவுஸ்ரேலியாவின் உதவியுடன் டெங்குவை கட்டுப்படுத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg