Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சைட்டத்தின் பெயரை மாற்ற முயற்சி: மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

In இலங்கை
Updated: 13:42 GMT, Jan 10, 2018 | Published: 12:37 GMT, Jan 10, 2018 |
0 Comments
1130
This post was written by : Arul Jesu
DSC_0577 2

‘மாலபே சைட்டம்’ தனியார் மருத்துகக் கல்லூரியின் பெயரை மாற்றி பதிவு செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் கண்டித்தும், சைட்டத்தை உடனடியாக மூடிவிட வேண்டும் எனக் கோரியும் கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறு மூலை வளாகத்தின் முன்றலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் விடுதிப் பகுதியிலிருந்து  ஊர்வலமாக வந்து பிரதான வீதியோரம் நின்று தமது கோஷங்களை எழுப்பினர்.

‘ஆட்சியாளர்களே சைட்டத்தை பெயர்மாற்றிப் பதிவு செய்யும் சூழ்ச்சியை உடனடியாக நிறுத்து!, வாக்களித்த ஜனநாயகம் இதுதானா?, பெற்றோர்களை அழித்து சைட்டத்தைப் பாதுகாப்பதா?, போலித் தீர்ப்பு வேண்டாம், சைட்டத்தை ரத்துச் செய்!’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவக் கல்வியை பணத்திற்கு விற்பனை செய்தால், அது பணம் படைத்தவர்களுக்கு வழங்கும் சலுகையாகவே அமையும். எனவே ஏழைப் பெற்றோர்களின் மாணவர்களைக் காப்பாற்றுவதற்காக உடனடியாக சைட்டத்தை தடை செய்யுங்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

DSC_0569 DSC_0577 DSC_0579

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)