குறைந்த வருமானம் பெறும் கனடியர்களுக்கு விஷேட சலுகை!
This post was written by : Anojkiyan

நடப்பு வருடம் குறைந்த வருமானம் பெறும் கனடியர்கள் தங்களது வருமான வரி தாக்கலை தொலைபேசி மூலம் செய்யலாம் என தேசிய வருமான வரி அமைச்சர் டயான் லெபௌதில்லர் தெரிவித்துள்ளார்.
இதற்காக File My Return எனப்படும் ஒரு தானியங்கி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த சேவையின் ஊடாக, குறைந்த அல்லது வருடத்திற்கு வருடம் மாறாத நிலையான வருமானம் கொண்ட கனடியர்கள் தொலைபேசி ஊடாக கேள்வித் தொடர்கள் ஒன்றிற்கு பதிலளிப்பதன் மூலம் தங்கள் வரமான வரி விபர அறிக்கையை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சேவையின் மூலம் சுமார் 950,000 கனடியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.