Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையரை மகிழ்வித்த ஜப்பானின் ‘அவா ஒடாரி’!

In இலங்கை
Published: 12:15 GMT, Jan 10, 2018 |
0 Comments
1060
This post was written by : Arul Jesu
awa odoriiii

இலங்கை சுதந்திரம் அடைந்த 70ஆவது ஆண்டு பூர்த்தியைச் சிறப்பிக்கும் வகையில் ஜப்பானியர்களின் பாரம்பரிய நிகழ்ச்சியான ‘அவா ஒடாரி’ (Awa- Odori) நடன நிகழ்ச்சி நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

கொழுப்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, ‘இலங்கை மற்றும் ஜப்பான் எதிர்காலத்திற்கான புறப்பாடு’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது.

ஜப்பானின் டொகுஷிமா பிராந்தியத்தில் தோற்றம் பெற்ற ‘அவா ஒடாரி’ நடனம், ஜப்பானின் பிரசித்தி பெற்ற விழாக்கால நடனமாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வு ஜப்பானின் ‘கொன்கான்ஜி’ மன்றத்தாலும், இலங்கைக்கான ஜப்பானியத் தூதரகத்தினாலும் ஏற்பாடுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானிய பாரம்பரிய கலை கலாசாரத்தை நேசிக்கும் சுமார் 400இற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அரங்கில் கூடி நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.

இலங்கைக்கும், ஜப்பானுக்கும் இடையிலான பாரம்பரிய பரஸ்பர உறவுகளை வளர்ப்பதில் இந்த நிகழ்வு முக்கியமானதொன்றாக அமைந்தது.

awa odori 222

awa odori 3333

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)