Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரணவிரு சேவையின் கீழ் மட்டக்களப்பில் மேலும் வீடுகள்!

In இலங்கை
Updated: 12:04 GMT, Jan 10, 2018 | Published: 12:04 GMT, Jan 10, 2018 |
0 Comments
1401
This post was written by : Ravivarman

‘ரணவிரு சேவா’ அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 58 வீடுகள் நிர்மாணிக்க சிபார்சு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அலுவலர் ரீ.எச்.கீர்திகா ஜயவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) மட்டக்களப்பில் இடம்பெற்ற ரணவிரு குடும்ப அங்கத்தவர்களுடனான சந்திப்பிலேயே அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றிய அவர்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் ‘ரணவிரு சேவா’ பயனாளிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 39 குடும்பங்களுக்கு ஒவ்வொன்றும் தலா 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலமைந்த வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் கடந்த ஜுன் மாதம் 19ஆம் திகதி ஆரம்பித்து தற்போது நிறைவடைந்துள்ளன.

இதற்கும் மேலதிகமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் ரணவிரு சேவா குடும்பங்களின் நலனைக் கருத்திற் கொண்டு தலா 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலமைந்த மேலும் 58 வீடுகள் முன்னுரிமை அடிப்படையில் தேவை என்ற வேண்டுகோளை ‘ரணவிரு சேவா’ அதிகார சபைக்குப் பரிந்துரைக்கப்பட்டதன் பேரில் அவற்றை நிர்மாணிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

இந்த இரு வீட்மைப்புத் திட்டங்கள் மூலமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 97 வீடுகளினால் ரணவிரு குடும்பங்கள் நன்மையடையவுள்ளார்கள்.

இவற்றைத் தவிர ரணவிரு குடும்பங்களின் வாழ்வாதாரம் மற்றும் அக்குடும்பங்களிலுள்ள இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்பையும் கருத்திற் கொண்டு பல்வேறு சுயதொழில் பயிற்சி நெறிகள் திட்டமிடப்பட்டுள்ளன” என இவர் மேலும் தெரிவித்தார்.

DSC01715 DSC01700

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg