Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எம்.எச்.370 மலேசிய விமானத்தைத் தேடும் பணி: ஒப்பந்தத்தில் கைச்சாத்து

In உலகம்
Updated: 15:25 GMT, Jan 10, 2018 | Published: 12:12 GMT, Jan 10, 2018 |
0 Comments
1192
This post was written by : Suganthini

காணாமல் போன எம்.எச்.370 மலேசிய விமானத்தைத் தேடும் நடவடிக்கை மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், இது தொடர்பான ஒப்பந்தத்தில் மலேசிய அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) கையொப்பமிட்டுள்ளனர்.

அமெரிக்கக் கடல் ஆய்வு நிறுவனமொன்றுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், மலேசிய அதிகாரிகள் கையொப்பமிட்டுள்ளனர்.

கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேடும் நடவடிக்கை, தென் இந்து சமுத்திரத்தில் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளது.

விமானத்தைத் தேடும் நடவடிக்கையை முன்னெடுக்கும் அமெரிக்கக் கடல் ஆய்வு நிறுவனம், எம்.எச்.370 விமானத்தைக் கண்டுபிடித்தால், அந்நிறுவனத்துக்கு 70 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்குவதற்கு மலேசிய அதிகாரிகள் இணங்கியுள்ளனர்.

விமானத்தைத் தேடிக் கண்டுபிடித்தால் மாத்திரம் மேற்படி நிதி வழங்கப்படுமென, மலேசிய போக்குவரத்து அமைச்சர் லியோ டியோங் லை ( Liow Tiong Lai ) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த விமானத்தைத் தேடும் நடவடிக்கை 90 நாட்களுக்குள் பூர்த்தியாகுமென, அமெரிக்கக் கடல் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச், மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரிலிலிருந்து சீனாவின் தலைநகரான பீஜிங் நோக்கி 239 பேருடன் பயணித்த எம்.எச்.370 விமானம் மர்மமான முறையில் காணாமல் போயிருந்தது.

இவ்விமானத்தைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோதும், அது பலனளிக்காத நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரியுடன் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg